ஐந்து வகையான முக்கிய தாவர ஹார்மோன்களை குறிப்பிடுக? 1.ஆக்சின்கள் 2. சைட்டோகைனின்கள் 3. ஜிப்ரல்லின்கள் 4. அப்சிசிக் அமிலம் (ABA) மற்றும் 5. எத்திலின்.
தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் எவை எவை? ஆக்சின்கள், சைட்டோகைனின்கள் மற்றும் ஜிப்ரல்லின்கள்.
தாவர வளர்ச்சியைத் தடை செய்யும் ஹார்மோன்கள் எவை எவை? அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின்.
நாளமில்லாச் சுரப்பிகளின் சுரப்புகள் ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன.
தாமஸ் அடிசன் என்பவர் “நாளமில்லாச் சுரப்பிமண்டலத்தின் தந்தை “ எனக் குறிப்பிடப்படுகிறது.
தலைமை சுரப்பி என அழைக்கப்படும் நாளமில்லா சுரப்பி எது? பிட்யூட்டரி சுரப்பி.
வளர்ச்சி ஹார்மோனை சுரக்கும் சுரப்பி எது? பிட்யூட்டரி சுரப்பி.
குள்ளத்தன்மை, அசுரத்தன்மை, அக்ரோமெகலி ஆகியவற்றுக்கு காரணமான சுரப்பி எது ? பிட்யூட்டரி சுரப்பி.
தைராய்டைத் தூண்டும் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி எது? பிட்யூட்டரி சுரப்பி.
ஆண் இனப்பெருக்க ஹார்மோன் எது? டெஸ்டோஸ்டிரோன்.
பெண் இனப்பெருக்க ஹார்மோன்கள் எவை? ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான்.
வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் சுரப்பு குறைவின் காரணமாக உருவாகும் நோய் எது? டயாபடீஸ் இன்சிபிடஸ்.
காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்கள் எது? மெலட்டோனின்.
தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு டைரோசின் என்னும் அமினோ அமிலமும் மற்றும் அயோடினும் காரணமாகின்றன.
ஆளுமை ஹார்மோன் என அழைக்கப்படும் ஹார்மோன் எது? தைராய்டு ஹார்மோன்களின்.
ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக் சினை ச் சுரக்க “120μg”அயோடின் தேவை ப்படுகிறது.
காய்டர் , கிரிட்டினிசம், மிக்ஸிடிமா ஆகியவை ஹைபோதைராய்டிசத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் எது? பாராதார்மோன்.
நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பியாக இரு வழிகளிலும் பணிபுரியும் உறுப்பு எது? கணையம்.
நீரிழிவு நோயை குணப்படுத்தும் மருந்து எது? இன்சுலின்.
லாங்கர்ஹான் திட்டுகள் ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள் என்னும் இருவகை செல்களைக் கொண்டுள்ளது.
ஆல்ஃபா செல்கள், குளுக்கோகான் ஹார்மோனை யும், பீட்டா செல்கள், இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
இன்சுலின் குளுக்கோஸைக் கிளைக்கோஜனாக மாற்றிக் கல்லீரலிலும் தசைகளிலும் சேமிக்கிறது.
இன்சுலின் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
குளுக்கோகான் கல்லீரலில் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாற்றம் அடைய உதவுகிறது.
குளுக்கோகான் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் எவ்வாறு வழங்கப்படுகிறது? ஹைபர்கிளைசீமியா.
சிறுநீரக மேற்சுரப்பிகள் என அழைக்கப்படுபவை எவை? அட்ரினல் சுரப்பிகள்.
அவசர கால ஹார்மோன்கள் என அழைக்கப்படுபவை எவை? எபிநெஃப்ரின் (அட்ரினலின்) மற்றும் நார் எபிநெ ஃப்ரின் (நார்அட்ரினலின்).
"சண்டை, பயமுறுத்தும் அல்லது பறக்கும் ஹார்மோன்கள்" என அழைக்கப்படுபவை எவை? எபிநெஃப்ரின் (அட்ரினலின்) மற்றும் நார் எபிநெ ஃப்ரின் (நார்அட்ரினலின்).
top of page

Search
bottom of page
Comments