இயற்பியல்-1
1. FPS என்பதன் விரிவாக்கம் என்ன? F = Feet/அடி, P = Pound /பவுண்ட், S = SECOND/வினாடி.
2. CGS என்பதன் விரிவாக்கம் என்ன? C - சென்டி மீட்டர், G – கிராம், S-SECOND/வினாடி.
3. MKS என்பதன் விரிவாக்கம் என்ன? M-Metter /மீட்டர், K – கிலோகிராம், S – வினாடி.
4. SI Unit என்பதன் விரிவாக்கம் என்ன? International System of Unit / பன்னாட்டு அலகு முறை.
5. SI Unit எந்த ஆண்டு மற்றும் எங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1960. பாரிஸ் நகரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11-வது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
6. எவை எவை மெட்ரிக் அலகு முறைகள் ஆகும்? CGS, MKS மற்றும் SI அலகு ஆகியவை மெட்ரிக் அலகு முறைகள் ஆகும்.
7. மெட்ரிக் அலகு முறை முதன் முதலில் எந்த நாட்டினாரால் உருவாக்கப்பட்டது?
1790ஆம் ஆண்டு பிரெஞ்ச் நாட்டினாரால் உருவாக்கப்பட்டது.
8. தானியங்கி வாகனம் ஒன்று கடந்த தொலைவைக் கணக்கிட உதவும் கருவி எது? ஓடோ மீட்டர்.
9. தானியங்கி வாகனம் ஒன்றின் வேகத்தை கணக்கிட உதவும் கருவி எது? ஸ்பீடோ மீட்டர்.
10. அணு உட்கருவின் ஆரத்தின் அளவு என்ன? 10-15 மீட்டர்.
11. இரு விண்மீன்களுக்கு இடையேயான சரசரித் தொலைவு என்ன? 1026 மீட்டர்.
12. எலக்ரானின் நிறை என்ன? 9.11 x 10-31 கி.கி.
13. பால்வழி அண்டத்தின் நிறை என்ன? 2.2 x 1041 Kg
14. 10 டெசி மீட்டர் சேர்ந்தது எவ்வளவு? 1 மீட்டர்.
15. 100 சென்டி மீட்டர் சேர்ந்தது எவ்வளவு? 1 மீட்டர்.
16. 1000 மில்லி மீட்டர் சேர்ந்தது எவ்வளவு? 1 மீட்டர்.
17. 1000000000 நானோ மீட்டர் சேர்ந்தது எவ்வளவு? 1 மீட்டர்.
18. 1000 மீட்டர் சேர்ந்தது எவ்வளவு? 1 கிலோமீட்டர்.
19. SI அடிப்படை அலகுகள் அல்லது அடிமான அலகுகள் மொத்தம் எத்தனை? 7 அடிப்படை அலகுகள்.
20. நீளத்தின் SI அலகு என்ன? (m)மீட்டர்.
21. நிறையின் SI அலகு என்ன? கிலோ கிராம் (கி.கி).
22. காலத்தின் SI அலகு என்ன? வினாடி / Second.
23. வெப்பநிலையின் SI அலகு என்ன? கெல்வின் / kelvin (K).
24. மின்னோட்டத்தின் SI அலகு என்ன? ஆம்பியர் / ampere (A).
25. ஒளிச்செறிவின் SI அலகு என்ன? கேண்டிலா / candela (cd).
26. பொருளின் அளவின் SI அலகு என்ன? மோல் / mole (mole).
27. ஒளியின் திசை வேகம் என்ன? 3,00,000 km/Second.
28. ஒரு வானியல் அலகு (1AU) என்பது? பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள சரசரித் தொலைவு.
29. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள சரசரித் தொலைவு எவ்வளவு? 1.496x 10
மீ அல்லது 149.6 மில்லியன் கி.மீ. அல்லது 149.6 x 106 கி.மீ.
30. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த தொலைவு / அண்மை நிலை எவ்வளவு? 147.1 மில்லியன் கிலோ மீட்டர்.
31. பூமியானது சூரியனிலிருந்து மிக அதிக தொலைவில் இருக்கும் போது சேய்மை நிலை என அழைக்கப்படும் அதன் தொலைவு எவ்வளவு? சுமார் 152.1 மில்லியன் கிலோமீட்டர்.
32. நெப்டியூன் சூரியனில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 30 வானியல் அலகு தொலைவில் உள்ளது.
33. ஒளி ஆண்டு என்பது ஒரு? ஒளி ஓர் ஆண்டில் கடக்கும் தூரம். இது நீளத்தின் அலகு.
34. ஒளி ஆண்டின் மதிப்பு என்ன? 9.46 x 1015 மீட்டர் அல்லது 9.46 x 1012 கிலோ மீட்டர்.
35. ப்ராக்ஷிமா செண்டாரி நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 4.24 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.
பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 25,800 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.
Comments